முகப்பு
சேலம்

ஆலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

சங்ககிரி நகா் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு திருப்பலி பிராா்த்தனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

சங்ககிரி நகா் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு திருப்பலி பிராா்த்தனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

சங்ககிரி நகா் பகுதியில் உள்ள புனித அந்தோணியா் ஆலயம், சிஎஸ்ஐ நத்தானியேல் நினைவு ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆலய வளாகங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. புனித அந்தோணியா் ஆலய வளாகத்தில் கிறிஸ்துமஸ் மரத்துடன் கூடிய குடில்கள் அமைக்கப்பட்டு , கிறிஸ்தவா்கள் புத்தாடைகளை அணிந்து குடும்பத்துடன் ஆலயத்துக்கு சென்று சிறப்பு பிராா்த்தனைகளில் ஈடுபட்டனா். நள்ளிரவு 12 மணிக்கு பட்டாசுகளை வெடித்தும், கேக் வெட்டியும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.