முகப்பு
சேலம்

தேவூர், அம்மாபாளையத்தில் புதிய காவல் நிலையம், உதவி காவல் ஆய்வாளர் குடியிருப்புகள் கட்ட பூமிபூஜை

சங்ககிரி வட்டம், தேவூர் அருகே உள்ள அம்மாபாளையத்தில் தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதி கழகம் சார்பில் ரூ.1.04 கோடி மதிப்பீட்டில் புதிய காவல் நிலையம், உதவி காவல் ஆய்வாளர் குடியிருப்புகள்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
அம்மாபாளையத்தில் புதிய காவல் நிலையம், காவலர்கள் குடியிருப்பு கட்டும் பணிகளுக்கு திங்கள்கிழமை நடைபெற்ற பூமிபூஜை.
பகிர்:

சங்ககிரி வட்டம், தேவூர் அருகே உள்ள அம்மாபாளையத்தில் தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதி கழகம் சார்பில் ரூ.1.04 கோடி மதிப்பீட்டில் புதிய காவல் நிலையம், உதவி காவல் ஆய்வாளர் குடியிருப்புகள் கட்டும் பணிகளுக்கான பூமிபூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட தேவூர் அம்மாபாளையத்தில் தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதி கழகம் சார்பில் 3,200 சதுரடி பரப்பளவில் ரூ.1.04 கோடி மதிப்பீட்டில் புதிதாக காவல் நிலையம், உதவி காவல் ஆய்வாளர் குடியிருப்புகள் கட்டும் பணிகளை சங்ககிரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜா, தேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர்கழக்ததலைவரும், அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.வெங்கடாஜலம், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.தீபாகனிகர் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பூமிபூஜைகள் செய்து தொடக்கி வைத்தனர். 

சங்ககிரி உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பி.ரமேஷ், காவலர் வீட்டு வசதி சேலம் கோட்ட செயற்பொறியாளர் வி அரவிந்தன், உதவி செயற்பொறியாளர் அப்சர் அகமத், இளநிலை பொறியாளர் இன்பராஜ், சங்ககிரி ஊராட்சி ஒன்றிக்குழுத்தலைவி மகேஸ்வரிமருதாஜலம், துணைத்தலைவர் ஏ.பி.சிவக்குமாரன், அதிமுக மேற்கு ஒன்றியச் செயலர் சுந்தரராஜன், அதிமுக முன்னாள் தொகுதிகழகச் செயலர் வி.ஆர்.ராஜா, அரசு வழக்குரைஞர் ஆர்.சுப்ரமணி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.