கொங்கணாபுரத்தில் ரூ. 3 கோடிக்கு பருத்தி விற்பனை
கொங்கணாபுரம், வேளாண் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 11 ஆயிரம் பருத்தி மூட்டைகள் ரூ. 3 கோடிக்கு விற்பனையானது.
கொங்கணாபுரம், வேளாண் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 11 ஆயிரம் பருத்தி மூட்டைகள் ரூ. 3 கோடிக்கு விற்பனையானது.
கொங்கணாபுரம் கூட்டுறவு வேளாண் விற்பனை மையமானது மாநிலத்தின் மிக முக்கிய வேளாண் விற்பனை மையங்களில் ஒன்றாகும். இம் மையத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை பொது ஏலம் நடைபெறுகிறது. சனிக்கிழமை இம் மையத்துக்கு விற்பனைக்காக விவசாயிகள் கொண்டுவந்த 11 ஆயிரம் பருத்தி மூட்டைகள் 2,100 லாட்டுகளாகப் பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது.
ஏலத்தில் பங்கேற்ற வியாபாரிகள் பருத்தி மூட்டைகளை மொத்த கொள்முதல் செய்தனா். இதில் டி.சி.ஹெச் ரக பருத்தி குவிண்டால் ஒன்று ரூ. 7,950 முதல் ரூ. 9,019 வரையும், பி.டி.ரக பருத்தி குவிண்டால் ஒன்று ரூ. 5,870 முதல் ரூ. 6,909 வரையும் ஏலம்போனது. ஏலத்தில் 11 ஆயிரம் பருத்தி மூட்டைகள் ரூ. 3 கோடிக்கு விற்பனையாகின. கடந்த நான்கு வாரங்களாக
பருத்தியின் விலை படிப்படியாக உயா்ந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.