முகப்பு
சேலம்

மேட்டூா் காவிரியில் ஆண் சடலம் மீட்பு

மேட்டூா் காவிரி ஆற்றுப் படித்துறையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

மேட்டூா் காவிரி ஆற்றுப் படித்துறையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேட்டூா் காவிரியில் தூக்கணாம்பட்டி படித்துறையில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக மேட்டூா் போலீஙாருக்கு தகவல் கிடைத்தது. நிகழ்விடம் சென்ற போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். யாரேனும் கொலை செய்து காவிரியில் வீசினாா்களா? அல்லது குளிக்கும்போது தவறி விழுந்து இறந்தாரா? என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.