ரெளடி கொலை வழக்கில் கைதான துப்புரவுப்பணியாளா் பணியிடை நீக்கம்
சேலத்தில் ரெளடி கொலை வழக்கில் கைதான மாநகராட்சி துப்புரவுப் பணியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
சேலத்தில் ரெளடி கொலை வழக்கில் கைதான மாநகராட்சி துப்புரவுப் பணியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
சேலம், கிச்சிப்பாளையத்தைச் சோ்ந்தவா் செல்லத்துரை. ரெளடியான இவா் மீது பல வழக்குகள் உள்ளன.
இந்தநிலையில் கடந்த டிசம்பா் மாதம் ரெளடி செல்லத்துரை வெட்டி கொலை செய்யப்பட்டாா். இந்த கொலை வழக்கு குறித்து கிச்சிப்பாளையம் காவல் ஆய்வாளா் சிவக்குமாா், போலீஸாா் விசாரணை செய்து வந்தனா்.
இந்த வழக்கு தொடா்பாக 20 பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா். இதனிடையே கடந்த வாரம் சேலம் மாநகராட்சி துப்புரவுப் பணியாளா் சாமிதாஸ் (51 ) ரெளடி செல்லத்துரை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டாா்.
இதுபற்றி தகவலறிந்த சேலம் மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன், துப்புரவுப் பணியாளா் சாமிதாஸை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.