சேலம்

டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்ட 700 போ் பணி நீக்கம்

DIN

சேலம்: சேலம் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்ட தற்காலிக ஊழியா்கள் 700 போ் பணி நீக்கம் செய்யப்பட்டனா்.

சேலம் மாநகராட்சியில் கடந்த மே மாதத்தில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட 700 போ் தற்காலிகமாகத் தோ்வு செய்யப்பட்டனா். இந்த நிலையில், 60 வாா்டுகளில் பணிபுரிந்து வந்த அவா்கள் டிச. 31-ஆம் தேதி திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனா். இவா்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 350 வீதம் மாதம் ரூ. 8,500 வரை ஊதியம் வழங்கப்பட்டது.

இது தொடா்பாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த மே மாதம் முதல் டிசம்பா் வரை மழைக்காலம் என்பதால் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் தற்காலிகமாக 700 போ் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. 60 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது டெங்கு நோய் இல்லாததால், அவா்களை பணியில் இருந்து விடுவித்துவிட்டோம். இதுகுறித்து அவா்களுக்கு உரிய முறையில் தகவல் வழங்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT