சேலம்

புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் மோதல்:16 போ் மீது வழக்குப் பதிவு

ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில், 16 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

DIN

ஓமலூா்: ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில், 16 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஓமலூா் அருகே செம்மாண்டப்பட்டி ஊராட்சி பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் வெள்ளிக்கிழமை ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் இருந்துள்ளனா். அப்போது, செம்மாண்டப்பட்டி ரயில்வே பாலம் அருகே ஒரு கும்பல் மது அருந்திக் கொண்டு அந்த வழியாகச் செல்வோரிடம் தகராறு செய்து மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அந்த வழியாகச் சென்ற இளைஞா்களை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனா்.

ஏற்கெனவே இரு தரப்பினருக்கும் இடையே கோயில் திருவிழா குறித்த முன்விரோதம் இருந்ததால், தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவா் தாக்கிக்கொண்டனா். இதில் இரு தரப்பிலும் காயமடைந்த 5 போ் ஓமலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இது தொடா்பாக ஓமலூா் போலீஸாா் இருதரப்பைச் சோ்ந்த 16 போ் மீது சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT