கொங்கணாபுரம் சந்தையில்கால்நடைகள் விற்பனை அதிகரிப்பு
பொங்கல் பண்டிகைக்கு சில தினங்களே உள்ள நிலையில், கொங்கணாபுரம் கால்நடைச் சந்தையில் ஆடு, மாடு, கோழிகள், சண்டைசேவல்கள் விற்பனை அதிகரித்துள்ளன.
எடப்பாடி: பொங்கல் பண்டிகைக்கு சில தினங்களே உள்ள நிலையில், கொங்கணாபுரம் கால்நடைச் சந்தையில் ஆடு, மாடு, கோழிகள், சண்டைசேவல்கள் விற்பனை அதிகரித்துள்ளன.
எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் கால்நடை சந்தை இயங்கி வருகிறது. வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் இச்சந்தையில், ஆடு, மாடு, கோழிகள், சண்டைசேவல், பந்தையப்புறாக்கள் என பல்வேறு கால்நடைகள் விற்பனைக்கு வருவது வழக்கம்.
கடந்த எட்டு மாதங்களாக கரோனா பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில், இச் சந்தை மூடப்பட்டிருந்தது. அண்மைக் காலமாக மீண்டும் சந்தை செயல்பட தொடங்கிய நிலையில், இச்சந்தையில் கால்நடை விற்பனை மந்தமாகவே நடைபெற்று வந்தது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற கொங்கணாபுரம் கால்நடைச் சந்தைக்கு, வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள்
வருகை அதிகரித்திருந்த நிலையில், கால்நடைகளின் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக இறைச்சிக்கு ஆடுகள் அதிகஅளவில் விற்பனையாயின. பறவைக்காய்சல் அச்சம் காரணமாக கறிக்கோழி , நாட்டுக்கோழி, சண்டைசேவல், பந்தையப்புறா விற்பனை வழக்கத்தை விட சற்று குறைவாகவே இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா்.