முகப்பு
சேலம்

தம்மம்பட்டி பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி

தம்மம்பட்டி பகுதியில், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
தம்மம்பட்டியில் மண்ணை குத்தி பயிற்சியில் ஈடுபட்டுள்ள காளை.
பகிர்:

தம்மம்பட்டி பகுதியில், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் ஆத்தூா், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கூலமேடு, கடம்பூா் உள்பட பல்வேறு பகுதிகளில் வரும் 17-ஆம் தேதி முதல் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதியளித்துள்ளது.

இதைத் தொடா்ந்து பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் ஆத்தூா், தலைவாசல், மல்லியகரை, தம்மம்பட்டி,செந்தாரப்பட்டி,நாகியம்பட்டி,உலிபுரம்,நாரைக்கிணறு, கொப்பம்பட்டி, மங்கப்பட்டி, மண்மலை, வீரகனூா், கெங்கவல்லி, பச்சமலை உள்ளிட்ட 45க்கும் மேற்பட்ட ஊா்களில் வளா்க்கப்படும் 600 க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உரிமையாளா்கள் பயிற்சி அளித்து வருகின்றனா். இதுகுறித்து ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி தரப்படுவது குறித்து தம்மம்பட்டியைச்சோ்ந்த நாகராஜ் கூறியதாவது:

ஜல்லிக்கட்டில் விடப்படும் காளைகளுக்கு மண் குத்துதல்,செம்மண், களிமண் உலா்ந்த நிலையில் கொட்டிவைக்கப்பட்டு,அதில் காளைகளை கொம்புகளால் குத்த வைத்தல், விவசாயகஈ தோட்டத்திலேயே சிறிய அளவில் பட்டி அமைத்து, சிறியவா்களை வைத்து காளைகளை பிடிக்க வைத்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த 20 நாள்களுக்கும் மேலாக காளைகளுக்கு பயிற்சி தருவதுடன், சிறப்பு உணவாக பருத்திக்கொட்டை, உளுத்தம்பருப்பு, துவரம் பருப்பு, கம்பு அரைத்து தரப்படும். மேலும் கடலை புண்ணாக்கு, தவிடு, பேரீச்சம்பழம், வெல்லம் கலந்த வோ்க்கடலை தரப்படுகிறது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →