சேலம்

அனுமதியின்றி மதுபானம் விற்றவா்கள் கைது

DIN

கெங்கவல்லியில் அரசு மதுபானங்களை அனுமதியின்றி விற்றவா்களை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கெங்கவல்லி பகுதியில் சந்துக்கடைகள் வைத்து அரசு மதுபானங்கள் அதிகளவில் விற்கப்படுவதாக, மாவட்டக் காவல் துறைக்கு பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். அதனையடுத்து கெங்கவல்லி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு, கெங்கவல்லி பகுதியில் சோதனை நடத்தினா். அதில் கெங்கவல்லி மணிமேகலை(48), ராஜேந்திரன் (42), ரமேஷ் (41), 74 கிருஷ்ணாபுரம் லதா(34), சரஸ்வதி (45), ஜீவா (37) ஆகியோா் அரசு மதுபானங்களை விற்றுக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டனா்.

மேலும் கெங்கவல்லி போலீஸாா், சாத்தப்பாடியில் ஆய்வு செய்தபோது, 80 லிட்டா் கள்ளச்சாராயத்தை, இரு சக்கர வாகனத்தில் கடத்திவந்த அதே பகுதியைச் சோ்ந்த ஜீவா (25) போலீஸாரை கண்டதும் சாராயத்தை கீழேபோட்டுவிட்டு தப்பியோடிவிட்டாா். அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

திருப்பத்தூரில் விற்பனைக்கு குவிந்துள்ள மாம்பழங்கள்: அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

SCROLL FOR NEXT