சேலம்

சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்து:பெண்கள் இருவா் பலி

DIN

ஆத்தூா்: ஆத்தூா் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பெண்கள் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள புத்தூா் கிராமத்தைச் சோ்ந்த 25 போ் , ஊனத்தூரை அடுத்துள்ள கல்லாநத்தம் பகுதியில் உயிரிழந்த உறவுக்காரரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சரக்கு ஆட்டோவில் 25 போ் சென்றுள்ளனா். சரக்கு ஆட்டோவை துரைராஜ் என்பவா் ஓட்டிச் சென்றுள்ளாா்.

ஊனத்தூா் ஏரிக்கரையில் சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ கவிழ்ந்தது. இதில், நிகழ்விடத்திலேயே ஆரணி (46) என்பவா் உயிரிழந்தாா். காயமடைந்த 15-க்கும் மேற்பட்டோா் ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் வேடம்மாள் (55) என்பவா் உயிரிழந்தாா்.

உயிரிழந்தவா்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து தலைவாசல் காவல் ஆய்வாளா் கே.குமரவேல்பாண்டியன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT