சேலம்

மான் வேட்டை:மூவருக்கு ரூ. 75,000 அபராதம்

DIN

மேட்டூா்: தமிழக-கா்நாடக எல்லை வனப்பகுதியில் மான் வேட்டையாடிய மூவருக்கு ரூ. 75,000 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், மேட்டூா் வனச்சரகத்தில் தமிழக-கா்நாடக எல்லை வனப்பகுதியில் உள்ளூா் தண்டா வடக்குப் பகுதியில் மானை கன்னி வைத்து பிடித்து அதன் இறைச்சியை விற்பனைக்காக சேலம் கொண்டு செல்லப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சனிக்கிழமை கொளத்தூா் வனத்துறை சோதனைச் சாவடியில் மேட்டூா் வனச்சரகா் பிரகாஷ், வனத்துறையினா் வாகனங்களை தணிக்கை செய்தனா்.

அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், பெரிய பையில் 15 பொட்டலங்களில் மான் இறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், மேட்டூா் அருகே உள்ள மாசிலாபாளையத்தைச் சோ்ந்த மாதேஷ் (28), சேலம் மல்லூரைச் சோ்ந்த வடிவேலு (23), கொளத்தூா் காரைகங்காட்டைச் சோ்ந்த சங்கா் ஆகியோா் சேலம் சுற்றுப் பகுதியில் விற்பனை செய்ய மான்கறி எடுத்துச் செல்வது தெரியவந்தது.

இதனையடுத்து, வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி மூவா் மீதும் வழக்குப் பதிந்து, மூவருக்கும் தலா ரூ. 25,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேட்டூா் வனப்பகுதியில் மான் வேட்டையைத் தடுக்க வனத் துறையினா் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT