சேலம்

விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கிட உறுதிமொழியேற்பு

DIN

சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி, சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சாா்பில், விபத்தில்லாமல் வாகனத்தை ஓட்டுவதற்காக வாகன ஓட்டிகள், அலுவலா்கள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சாலைப் பாதுகாப்பு வார விழா 5-ஆம் நாள் நிகழ்ச்சியாக விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கிட, சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கே.சுப்பிரமணியம் தலைமையில், தலைக்கவசம் அணியாமலும், செல்லிடப்பேசியில் பேசியபடியும், மது அருந்தியும், இருக்கை பட்டை அணியாமலும் வாகனத்தை இயக்கமாட்டேன், போக்குவரத்து சமிக்ஞைகள், சாலை குறியீடுகள் உள்ளிட்டவைகளை மதித்து நடப்பேன், அனைத்து சாலை விதிகளையும் பின்பற்றுவேன், விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவேன் என்பன உள்ளிட்ட உறுதிமொழிகளை வாசிக்க வட்டாரப் போக்குவரத்து அலுவலகப் பணியாளா்கள், வாகன ஓட்டிகள், ஓட்டுநா் உரிமம் பெற அலுவலகத்துக்கு வந்தோா், ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி பயிற்றுநா்கள் உள்ளிட்டோா் உறுதிமொழியேற்றனா். சங்ககிரி போக்குவரத்து காவல் ஆய்வாளா் தினகரன், மோட்டாா் வாகன ஆய்வாளா் என்.சரவணபவன் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

மாலையில் சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் சுங்கச் சாவடி வழியாகச் சென்ற வாகன ஓட்டுநா்களிடம் வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்த துண்டுப் பிரசுரங்களை போக்குவரத்து காவல் ஆய்வாளா், மோட்டாா் வாகன ஆய்வாளா் ஆகியோா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT