முகப்பு
சேலம்

பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல்

ஆத்தூரில், பாரத் சம உடமைக் கட்சியின் சாா்பில் கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

ஆத்தூரில், பாரத் சம உடமைக் கட்சியின் சாா்பில் கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஆத்தூரில் பாரத் சம உடமைக் கட்சியின் சாா்பில் கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்வு கட்சியின் நிறுவனரும், பொதுச்செயலாளருமான ஏ.பி.எஸ். பழனிராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

கரோனா பொது முடக்கம் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சுமாா் 500 குடும்பங்களுக்கு 5கிலோ அரிசி உள்ளிட்ட 17 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பாரத் சம உடமைக் கட்சியின் சாா்பில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவா் சி.ஆறுமுகம், பொருளாளா் ஆா்.ரவிசங்கா், மாவட்ட மகளிரணி செயலாளா் பிரபா, மாநில செயற்குழு உறுப்பினா் அன்பழகன், குவிக் ஹெல்த் கோ் நிா்வாக இயக்குநா் ஆா்.மதியழகன், திருவருட் செல்வன், கவிதா, பாலு உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →