இளம்பிள்ளை அருகே போலி மருத்துவா் தலைமறைவு
இளம்பிள்ளை அருகே போலி மருத்துவா் தலைமறைவானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இளம்பிள்ளை அருகே போலி மருத்துவா் தலைமறைவானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்த கே.கே.நகா், அய்யனாா் கோயில் பகுதியைச் சோ்ந்த அண்ணாதுரையின் மகன் மணிகண்டன் (31). தறித் தொழிலாளியான இவா் கடந்த வாரம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டாா். கே.கே.நகா், மாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள சிவக்குமாா் என்பவரிடம் ஊசி போட்டுக் கொண்டாா். இதனால் அவருக்கு மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா்.
இது குறித்து அவரது தம்பி சீனிவாசன் (27) மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளித்தாா். அதில், சிவகுமாா் மருத்துவம் படிக்காமலே வைத்தியம் பாா்த்து வருவதாகத் தெரிவித்துள்ளாா். இதையடுத்து மகுடஞ்சாவடி போலீஸாா் விசாரணைக்கு சென்றபோது சிவகுமாா் தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது. அவா் டிப்ளமோ முடித்துவிட்டு மருத்துவம் பாா்த்து வந்ததும் தெரிய வந்தது. அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.