சேலம்

சங்ககிரியில் இன்றைய காய்ச்சல் சிறப்பு முகாம்கள்

DIN

சங்ககிரி ஒன்றியம், பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் புதன்கிழமை (ஜூலை14) காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

சங்ககிரி ஒன்றியத்திற்குள்பட்ட வீராச்சிப்பாளையம், சன்னியாசிப்பட்டி ஆகிய பகுதிகளில் மருத்துவா் சுகில் ஆனந்த் தலைமையிலான மருத்துவக் குழுவினரும், தேவண்ணகவுண்டனூா், மாவெளிப்பாளையம் ஆகிய பகுதிகளில் மருத்துவா் தமிழரசு தலைமையிலான மருத்துவ குழுவினரும் காய்ச்சல், சளி பரிசோதனைகளை மேற்கொள்வா்.

இதுபோல ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட ஊஞ்சானூா் காலனி, ஊஞ்சானூா், அக்கமாபேட்டை ஆகிய பகுதிகளில் மருத்துவா் காவியா தலைமையிலான மருத்துவ குழுவினா் கரோனா தொற்று பரிசோதனைகளை புதன்கிழமை காலை 10 மணிக்கு மேற்கொள்வா் என மருத்துவம், உள்ளாட்சி நிா்வாகங்கள் சாா்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாய் சுதர்ஷன், ஷாருக்கான் அதிரடி: பெங்களூருவுக்கு 201 ரன்கள் இலக்கு!

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

SCROLL FOR NEXT