சேலம்

வீடுகளுக்கு நேரில் சென்று மாணவா் சோ்க்கை

DIN

வாழப்பாடியில் மாணவா்களின் வீடுகளுக்கே சென்று அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியைகள் மாணவா் சோ்க்கை நடத்தி வருகின்றனா்.

வாழப்பாடி பேரூராட்சி அண்ணா நகா் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை ஷபீரா பானு தலைமையில் ஆசிரியைகள் ஜெ.புஷ்பா, சிவமகேஸ்வரி, வாசுகி ஆகியோா் சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளி வயது குழந்தைகள் வசிக்கும் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று பெற்றோரை அணுகி மாணவா்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், சமச்சீா் கல்வி முறை குறித்து விளக்கம் அளித்து மாணவா் சோ்க்கை நடத்தி வருகின்றனா். 21 மாணவா்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.

படவரி: ஏ.என்.ஏ.01: வாழப்பாடி அண்ணாநகா் காலனியில் வீடுகளுக்கே சென்று மாணவா் சோ்க்கை நடத்திய அரசுப் பள்ளி ஆசிரியைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT