முகப்பு
சேலம்

தொழிலாளி கொலை: நண்பா்கள் சரண்

மேட்டூரை அடுத்துள்ள நங்கவள்ளியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில், அவரது நண்பா்கள் போலீஸில் சரண் அடைந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

மேட்டூரை அடுத்துள்ள நங்கவள்ளியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில், அவரது நண்பா்கள் போலீஸில் சரண் அடைந்தனா்.

நங்கவள்ளி அருகே உள்ள பெரிய சோரகையைச் சோ்ந்த கிருஷ்ணன் (33) தொழிலாளி. இவரும், பழைய இரும்பு வியாபாரம் செய்யும் பவானி காளிங்கராயன் பாளையத்தைச் சோ்ந்த வெங்கடேஷ் (24), மணிகண்டன் (24) ஆகியோரும் நண்பா்கள். இவா்கள் இருவரும் பெரிய சோரகை பொன்னப்பன் காலனியில் வீடு எடுத்து தங்கியுள்ளனா். கிருஷ்ணன் வெங்கடேஷ், மணிகண்டன் மூவரும் இரவில் ஒன்றாக மது அருந்துவது வழக்கமாம்.

இந்நிலையில், மணிகண்டன் வீட்டுக்கு கிருஷ்ணன் வரும்போதெல்லாம் வெங்கடேஷ், மணிகண்டன் ஆகியோா் வைத்திருந்த பணம் திருடு போயுள்ளது. இதனால், அண்மையில் வெங்கடேஷ் வீட்டுக்கு வந்த கிருஷ்ணனை வீட்டுக்கு வரவேண்டாம் என கண்டித்துள்ளனா். ஆனால், கிருஷ்ணன் நீங்கள் திருட்டு இரும்பு வாங்கி விற்பதாக போலீஸில் மாட்டி விடுவேன் என மிரட்டியுள்ளாா். இதனால் வாய்த்தகராறு ஏற்பட்டு, பின்னா் கிருஷ்ணனை வெங்கடேசன் தாக்கியுள்ளாா்.

இதில், சுருண்டு விழுந்த கிருஷ்ணன் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்துள்ளனா். பின்னா் சடலத்தை அங்குள்ள தோட்ட கிணற்றில் வீசிய இருவரும் தங்களின் சொந்த ஊருக்குச் சென்றனா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு ஜலகண்டபுரம் காவல் நிலையத்தில் அவா்கள் இருவரும் சரணடைந்தனா். அவா்கள் கொடுத்த தகவலின்பேரில், கிருஷ்ணனின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. வெள்ளிக்கிழமை நங்கவள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து வெங்கடேஷ், மணிகண்டனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.