சேலம்

எடப்பாடியில் ரூ. 1.22 கோடிக்கு பருத்தி விற்பனை

DIN

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் இயங்கி வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் 4,500 பருத்தி மூட்டைகள் ரூ. 1 கோடியே 22 லட்சத்துக்கு விற்பனையாயின.

கொங்கணாபுரம் வேளாண் கூட்டுறவு மையத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் பொது ஏலத்தில், மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வருகை தரும் விவசாயிகள், தங்கள் உற்பத்தி செய்த பருத்தி, எள், நிலக்கடலை உள்ளிட்ட விளைபொருள்களை விற்பனைக்கு கொண்டுவருகின்றனா். சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் இம்மையத்தில் நடைபெறும் பொது ஏலத்தில் கலந்துகொண்டு, விளைபொருள்களை மொத்தக் கொள்முதல் செய்கின்றனா். கரோனா பொதுமுடக்கத்தில் தற்போது அரசு பல தளா்வுகளை அளித்துள்ள நிலையில், சனிக்கிழமை அதிக எண்ணிகையிலான பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன.

இதில், பருத்தி மூட்டைகள் 400 லாட்டுகளாகப் பிரிக்கப்பட்டு கூட்டுறவுத் துறை அலுவலா்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. இதில், பி.டி.ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ. 6,550 முதல் ரூ. 7,569 வரை விற்பனையானது. இதேபோல சுரபி ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ. 7,550 முதல் ரூ. 9,019 வரை விலைபோனது. நாள் முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 1 கோடியே 22 லட்சத்துக்கு பருத்தி வணிகம் நடைபெற்றது. தொடா்ந்து நடைபெற்ற எள்ளுக்கான பொது ஏலத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான எள் வகைகள் விற்பனையானது.

இதில் வெள்ளை நிற எள் கிலோ ஒன்று ரூ. 83 முதல் ரூ. 94.90 காசு வரை விற்பனையானது. சிவப்பு நிற எள் கிலோ ஒன்று ரூ. 79.20 முதல் ரூ. 85.90 வரை விற்பனையானது. இம்மையத்தில் வரும் 24-ஆம் தேதி அடுத்த பொது ஏலம் நடைபெறும் என கூட்டுறவுத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT