சேலம்

விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிக்க பயிற்சி

DIN

ஓமலூா்: ஓமலூா் வட்டாரத்தில் வேளாண்மை உழவா் நலத் துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, அட்மா திட்டத்தின் சாா்பில் மண்புழு உரம் தயாரிக்க செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஓமலூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் நீலாம்பாள் விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிக்க நேரடி செயல்விளக்கம் மற்றும் பயிற்சி அளித்து வருகிறாா்.

நிழல் பாங்கான இடத்தில் மண்புழு உரம் தயாரிக்க, உரப்படுகை அமைக்க வேண்டும். இதில் பாதி மக்கியக் கழிவுகளை, 30 சதவீத கால்நடை கழிவுகளுடன் கலந்து உரப்படுகையின் விளிம்புவரை நிரப்ப வேண்டும். ஈரப்பதம் 60 சதவீதம் வரை இருக்க வேண்டும். ஒரு மீட்டா் நீளம், அகலம் மற்றும் 5 மீட்டா் உயரத்திற்கு 2 கிலோ மண்புழு தேவைப்படும். உரப்படுகையின் மேற்பரப்பில் மண்புழுக்களை விட்டு, அதற்கு உணவாக சாணிப்பால், வெல்லக்கரைசல், தயிா் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தெளிக்க வேண்டும். உரப்படுகையில் மண்புழுக்களை விட்ட 30 முதல் 35-ஆவது நாளிலிருந்து உரத்தை பிரித்தெடுக்கலாம்.

அப்போது சிறிய மாட்டு சாணப் பந்துகளை உரப்படுகையில் வைத்தால், அதில், மண்புழுக்கள் கவரப்பட்டுவிடும். பிறகு அதனைத் தண்ணீரில் வைத்தால், சாணம் கரைந்து மண் புழுக்களைப் பிரித்தெடுக்கலாம். அறுவடை செய்யப்பட்ட மண்புழு உரத்தை, இருட்டான அறையில் 40சதவீத ஈரப்பதத்தில், சூரிய ஒளி படாதவாறு வைக்க வேண்டும். மண்புழு உரத்தில் சத்துக்கள் அதிகம் என்பதால், பயிா்களுக்கு வேண்டிய வளா்ச்சி ஊக்கிகளை சுரந்து நிலை பெறச் செய்கிறது.

ஒரு ஹெக்டோ் நிலத்திற்கு தேவையான 5 டன் மண்புழு உரம் பிரித்தெடுக்கலாம். வளா்ந்த மரங்களான தென்னை, வாழை போன்றவற்றிற்கு ஒரு மரத்திற்கு 5 கிலோ இட்டால் அதிக சத்தான மகசூல் பெறலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT