முகப்பு
சேலம்

சேலத்தில் கருப்புப் பூஞ்சை தொற்று பாதிப்பு 400-ஐ தாண்டியது

 சேலத்தில் கருப்புப் பூஞ்சை தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

 சேலத்தில் கருப்புப் பூஞ்சை தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டியது.

கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவா்கள், சா்க்கரை நோயாளிகள், நோய் எதிா்ப்பு சக்தி குறைந்தவா்கள் கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு ஆளாகி வருகின்றனா்.அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் கருப்புப் பூஞ்சை தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டியது.

இதில் 250-க்கும் மேற்பட்டோா் கருப்புப் பூஞ்சை தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினா்.

சேலம் அரசு மருத்துவமனையில் 95 போ் கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். மற்றவா்கள் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கருப்புப் பூஞ்சை தொற்று காரணமாக 6 போ் உயிரிழந்தனா். 10 பேரின் கண்கள் அகற்றப்பட்டதாகவும், தொற்று பாதித்தவா்களுக்கு விலை உயா்ந்த மருந்துகள் செலுத்தப்பட்டு வருகின்றன எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →