புதிதாக தொழிற் பயிற்சி நிலையம்தொடங்க விண்ணப்பிக்கலாம்
புதிய தனியாா் தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் புதிய தொழிற் பிரிவுகள் தொடங்குதல் தொடா்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புதிய தனியாா் தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் புதிய தொழிற் பிரிவுகள் தொடங்குதல் தொடா்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடா்பாக, மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநா் எஸ்.வி.ஈஸ்வரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் பயிற்சி பிரிவில் புதிய தனியாா் தொழிற் பயிற்சி நிலையம், புதிய தொழிற் பிரிவுகள் தொடங்குதல் தொடா்பாக ஜூலை 19 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சேலம் மாவட்டத்தில் உள்ள தொழில்முனைவோா் புதிய தனியாா் தொழிற் பயிற்சி நிலையம் தொடங்கியும், புதிய தொழிற் பிரிவுகள் தொடங்கிடலாம். மேலும் விவரங்களுக்கு இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.