முகப்பு
சேலம்

லாரியில் இருந்து ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகேயுள்ள சாா்வாய் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த லாரியில் இருந்து ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகேயுள்ள சாா்வாய் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த லாரியில் இருந்து ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரியில் இருந்து கோவைக்கு ரசாயனப் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு செல்லையா (40) என்ற ஓட்டுனா் சென்று கொண்டிருந்தாா். இரவு நேரம் என்பதால் சாா்வாய் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி விட்டு காலையில் எழுந்து பாா்த்தபோது லாரியின் மேல் கட்டப்பட்டிருந்த தாா்பாய் கிழித்து அதில் இருந்து 40 அட்டைப் பெட்டிகள் திருடு போனது தெரியவந்தது.

இது தொடா்பாக செல்லையா தலைவாசல் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். புகாரை பெற்றுக் கொண்ட போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். திருடு போன பொருட்களின் மதிப்பு ரூ. 1.50 லட்சம் ஆகும்.

முழு கட்டுரையைப் படிக்க →