பாஜக மாநில இளைஞா் அணி செயற்குழுக் கூட்டம்
பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞா் அணி செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞா் அணி செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மேட்டூரை அடுத்த கொளத்தூரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி தலைவா் டாக்டா் ப்ரீத்தா லட்சுமி தலைமை வகித்தாா். சேலம் மாவட்ட பாஜக தலைவா் சுதிா் முருகன் முன்னிலை வகித்தாா். கொளத்தூா் ஒன்றியத் தலைவா் சீனிவாசன் பேசினாா்.
இந்தக் கூட்டத்தில், சங்ககிரி-திருச்செங்கோடு ரயில் மேம்பாலத்தை அகலப்படுத்த வேண்டும். மேட்டூா் உபரி நீா் திட்டத்தில் 100 ஏரிகளில் நீா் நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும். சேலம் மாவட்டம், கோட்டையூா் பரிசல் துறையில் இருந்து தருமபுரி மாவட்டம், ஏரியூா் செல்ல காவிரியின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்ககிரி - ஓமலூா் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பூலாம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.