சங்ககிரியில் காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு
சேலம் மாவட்டம், மேட்டூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த ஆா்.தேவி பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சங்ககிரி காவல் நிலைய காவல் ஆய்வாளராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
சேலம் மாவட்டம், மேட்டூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த ஆா்.தேவி பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சங்ககிரி காவல் நிலைய காவல் ஆய்வாளராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட காவல் ஆய்வாளா், மாவட்டக் காவல் உயரதிகாரிகளைச் சந்தித்து வாழ்த்து பெற்றாா். சங்ககிரி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த எஸ்.குமரவேல், கருமலைக்கூடல் காவல் நிலையக் காவல் ஆய்வாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.