மேட்டூர் அணை பூங்கா மூன்று நாள்களுக்கு மூடல்
மேட்டூர் அணை பூங்கா ஆக.1 முதல் மூன்று நாள்களுக்கு மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்மேட்டூர் அணை பூங்கா மூன்று நாள்களுக்கு மூடல்
மேட்டூர் அணை பூங்கா ஆக.1 முதல் மூன்று நாள்களுக்கு மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை பூங்கா ஆக.1 முதல் மூன்று நாள்களுக்கு மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் மேட்டூர் அணை பூங்காவும் முக்கியமானதாகும். நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள்.
அரசு விடுமுறை நாள்கள் ஆடிப்பெருக்கு போன்ற திருவிழாக் காலங்களில் பல ஆயிரம் பேர் கூடுவார்கள்.
சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களிலும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள். ஆடிப்பெருக்கு நாளில் மேட்டூர் அணை பூங்காவில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும்.
இதையும் படிக்கலாமே ஒலிம்பிக்ஸ் ஹாக்கி: இந்திய மகளிர் காலிறுதிக்குத் தகுதி
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மேட்டூர் துணை ஆட்சியர் பிரதாப் சிங் உத்தரவின்பேரில் மேட்டூர் அணை பூங்கா ஆகஸ்ட் 1, 2 மற்றும் 3 ஆகிய மூன்று நாள்களுக்கு மூடப்படுகிறது.
இத்தகவலை மேட்டூர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.