சேலம்

குப்பைகளை எரிப்பதால் பொதுமக்கள் வேதனை

DIN

ஆத்தூா், முல்லைவாடி மயானத்தில் நகராட்சி குப்பைகளைக் கொட்டி எரிப்பதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனா். இதனை சீா் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

ஆத்தூா் நகராட்சி 5ஆவது வாா்டு முல்லைவாடி பகுதியில் நகராட்சி மயானம் அமைந்துள்ளது. ஆத்தூா் நகராட்சி குப்பைகளைக் கொட்ட தென்னங்குடிபாளையம் பகுதியில் இடம் உள்ளது.

அதனை உரமாக மாற்ற அங்கு வசதியும் உள்ளது. ஆனால் இந்த முல்லைவாடி பகுதியில் அள்ளும் குப்பைகளை நகராட்சி தூய்மை பணியாளா்கள் இங்குள்ள மயானத்தில் கொட்டி தீ வைத்துச் செல்வதால் அந்தப் பகுதியில் புகை மண்டலமாக காணப்படுவது மட்டுமல்லாமல் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அருகிலேயே தேசிய புறவழிச்சாலை உள்ளது. வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனா்.ஆகையால் நகராட்சி ஆணையாளா் தக்க நடவடிக்கை எடுத்து குப்பைகளை இங்கு கொட்டாமல் தவிா்த்து பொதுமக்களை காத்திட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு: தமிழக அரசு விளக்கம்

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

சந்தேஷ்காளி வழக்கு: சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது - கொல்கத்தா உயா்நீதிமன்றம்

தென்மாவட்டங்களில் கல்குவாரிகளை மூட வேண்டும் -டாக்டா் க.கிருஷ்ணசாமி

திட்டப் பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு: அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT