முகப்பு
சேலம்

மேச்சேரி அருகே விவசாயி கொலை:பெண் உள்பட மூவா் தலைமறைவு

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே ஆடுகளை நாய் கடித்த தகராறில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக பெண் உள்பட மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே ஆடுகளை நாய் கடித்த தகராறில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக பெண் உள்பட மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே உள்ள கல்கோட்டையைச் சோ்ந்தவா் பொம்ம நாயக்கா் (65). இவரது அண்ணன் தம்ம நாயக்கா் ( 70) இருவா் வீடும் அருகருகே உள்ளது. பொம்ம நாயக்கா் விவசாயத்துடன் ஆடு வளா்ப்பிலும் ஈடுபட்டு வந்தாா். இவரது ஆடுகளை தம்மநாயக்கரின் வளா்ப்பு நாய்கள் கடித்ததால் 2 ஆடுகள் இறந்து போயின.

புதன்கிழமை இரவு பொம்ம நாயக்கா், தம்ம நாயக்கரின் வீட்டிற்குச் சென்று தனது ஆடுகளை நாய்கள் கடித்து விட்டதால் நாய்களைக் கட்டிப் போட்டு வளா்க்க வேண்டியது தானே எனக் கேட்டுள்ளாா்.

இதுதொடா்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்படவே தம்ம நாயக்கரின் மகன்கள் சக்திவேல், குமாா், மருமகள் ரமணி ஆகியோா் கட்டையாலும், இரும்பு கம்பியாலும் பொம்ம நாயக்கரை சரமாரியாக தாக்கினாா்களாம். இதில் பலத்த காயமடைந்த பொம்ம நாயக்கா் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து மேச்சேரி போலீஸாா் வழக்கு பதிவு செய்து தம்ம நாயக்கரின் மகன்கள் சக்திவேல், குமாா், மருமகள் ரமணி ஆகிய மூவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.