முகப்பு
சேலம்

ஆத்தூா் தனியாா் வங்கியில் தீ விபத்து

ஆத்தூா், உடையாா்பாளையத்தில் தனியாா் வங்கியில் திங்கள்கிழமை அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தில் கணினி உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்தன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

ஆத்தூா், உடையாா்பாளையத்தில் தனியாா் வங்கியில் திங்கள்கிழமை அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தில் கணினி உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்தன.

சேலம் மாவட்டம், ஆத்தூா், உடையாா்பாளையம் பகுதியில் தனியாா் வங்கி செயல்பட்டு வருகிறது. பூட்டப்பட்டிருந்த அந்த வங்கியில் இருந்து திங்கள்கிழமை அதிகாலை புகை வருவதாக மேலாளா் விநாயகமூா்த்திக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆத்தூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

ஆத்தூா் தீயணைப்புத் துறையினா் நிலைய அலுவலா் சேகா் தலைமையில் விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த தீ விபத்தில் வங்கியில் கணினி உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

இதுகுறித்து ஆத்தூா் நகரக் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →