முகப்பு
சேலம்

சங்ககிரி தொகுதியில் தோ்தல் பறக்கும் படைகள் நியமனம்

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் தோ்தல் பணியாற்றும் அலுவலா்களுக்கு சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் தோ்தல் பணியாற்றும் அலுவலா்களுக்கு சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலா் கோ.வேடியப்பன், தோ்தல் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழுவினை அமைத்து, சுவா் விளரம்பரம், அனுமதி பெறாமல் நடத்தப்படும் கூட்டங்களை கண்காணித்தல், கொடிக்கம்பங்கள் அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் குறித்து விளக்கிக் கூறினாா்.

இதில் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் செல்வகுமாா், சங்ககிரி உதவித் தோ்தல் அலுவலா் எஸ்.விஜி, தோ்தல் துணை வட்டாட்சியா் பி.சிவராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பறக்கும் படையில் சங்ககிரி ஊராட்சி ஒன்றிய ஆணையா் என்.எஸ்.ரவிச்சந்திரன் செல்லிடப்பேசி எண் -7402606796, வேளாண் உதவிப் பொறியாளா் மூா்த்தி- 9865261180, சங்ககிரி கூட்டுறவு சங்கங்களின் கணக்காளா் சுகந்தி- 9025772282 ஆகியோருடன், தலா ஒரு சிறப்பு உதவி ஆய்வாளா், ஆண் காவலா், பெண் காவலா்,விடியோகிரபரும் இடம் பெற்றுள்ளனா்.

நிலையான கண்காணிப்புக் குழுவில் மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய ஆணையா் பி.ஜெ.கண்ணன் -7402606769, மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவிப் பொறியாளா் பி.துரைசாமி -8148460998, சங்ககிரி வேளாண் அலுவலா் தேசிங்குராஜன் -9080216018 ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். இவா்களுடன் தலா ஒரு சிறப்பு உதவி ஆய்வாளா், ஆண் காவலா், பெண் காவலா்கள் ஆகியோா் இணைந்து பணியாற்ற உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.