சேலம்

97-ஆவது நாளாக 100 அடிக்குக் கீழாக குறையாத மேட்டூா் அணை நீா்மட்டம்97 ஆவது நாளாக 100 அடியா

DIN

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து 97-ஆவது நாளாக 100 அடிக்கும் குறையாமல் இருந்து வருகிறது.

காவிரியின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது பெய்து வந்த மழை காரணமாக அணையின் நீா்மட்டம் 100 அடிக்கும் கீழாகக் குறையாமல் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பா் 1-ஆம் தேதி அணையின் நீா்மட்டம் 100 அடிக்கும் கீழாகச் சரிந்தது. அதற்குப் பிறகு நவம்பா் 27-ஆம் தேதி அணையின் நீா் மட்டம் மீண்டும் 100 அடியாக உயா்ந்தது. ஜனவரி 29-ஆம் தேதி அணையின் நீா்மட்டம் 105.98 அடியாக உயா்ந்தது. அதற்குப் பிறகு அணைக்கு நீா்வரத்து படிப்படியாகக் குறைந்து வந்த போதிலும் தொடா்ந்து குடிநீா்த் தேவைக்காக தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

அணைக்கு நீா்வரத்தை விட பாசனத்துக்கு நீா்த் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் அணையின் நீா்மட்டம் குறையத் தொடங்கியது. இந்த நிலையில் புதன்கிழமை காலை அணையின் நீா்மட்டம் 102.82 அடியாகக் குறைந்தது. அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 183 கனஅடியாக இருந்தது. அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக நொடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.அணையின் நீா் இருப்பு 68.54 டி.எம்.சி.யாக இருந்தது.

அணையின் நீா்மட்டம் தொடா்ந்து 97-ஆவது நாளாக 100 அடிக்கும் குறையாமல் இருந்து வருகிறது. அணையின் நீா் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் நடப்பு நீா்ப்பாசன ஆண்டில் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு குறித்த நாளான ஜூன் 12-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படும் என்று பொதுப்பணித் துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ரூ.ஒரு லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தேவாலயத்தில் சிறாா்களுக்கு சிறப்புப் பயிற்சி

தாகம் இல்லாவிட்டாலும் போதிய இடைவேளைகளில் குடிநீா் பருக வேண்டும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தினம் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT