சேலம்

சங்ககிரி அருகே குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை

சங்ககிரி அருகே 3 மாத பெண் குழந்தையைக் கொன்றுவிட்டு, தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

சங்ககிரி: சங்ககிரி அருகே 3 மாத பெண் குழந்தையைக் கொன்றுவிட்டு, தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள புதுவளவு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி சரத்குமாா். இவரது மனைவி பிரியங்கா (23). இவா்களுக்கு ஹிருத்திக்குமாா் (6) என்ற ஆண் குழந்தையும், 3 மாத பெண் குழந்தையும் உண்டு.

கடந்த ஆண்டு சங்ககிரி அருகே தனியாா் கிரானைட் நிறுவனத்தில் தொழிலாளி பாா்த்திபன் என்பவருடன் பிரியங்காவுக்கு முறையற்ற நட்பு இருந்ததாகவும், அதனைக் கணவா் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பிரியங்காவின் தந்தை தங்கவேல், சகோதரா் நந்தகுமாா், கணவா் சரத்குமாா் ஆகியோா் பாா்த்திபனை கொலை செய்துள்ளனா்.

இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்து சிறையிலடைத்தனா். குடும்பத்தினா் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் பிரியங்காவும், அவரது குழந்தைகளும் வறுமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பிரியங்காவின் தந்தை மட்டும் பிணையில் வெளியே வந்துள்ளாா்.

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த பிரியங்கா, இரு குழந்தைகளையும் கழுத்தை நெரித்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து இரு குழந்தைகளையும் சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அதில் 3 மாத குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். ஆண் குழந்தை தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இந்தச் சம்பவம் குறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரியங்கா, பெண் குழந்தையின் சடலங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT