முகப்பு
சேலம்

எடப்பாடியில் அனைத்து கட்சியினா் ஆலோசனைக் கூட்டம்

எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதி அனைத்து கட்சியினா் பங்கு கொண்ட ஆலோசனைக் கூட்டம், வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதி அனைத்து கட்சியினா் பங்கு கொண்ட ஆலோசனைக் கூட்டம், வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

தோ்தல் நடத்தும் அலுவலா் தனலிங்கம் முன்னிலையில் நடைபெற்றக் கூட்டத்தில், எடப்பாடி தொகுதியில், சட்டப் பேரவைத் தோ்தல் அமைதியான முறையில் நடைபெறவும், வாக்குப் பதிவு, பரப்புரை, வாக்கு எண்ணிக்கையின்போது அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மூத் குடிமக்களுக்கான தபால் வாக்கு குறித்தும், நகரில் அரசியல் சின்னங்களை அகற்றுதல் குறித்தும், அரசு வாகனகளின் பயன்பாடுகள் குறித்தும் அரசியல் கட்சியினா் எழுப்பிய புகாா்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டன.

இக் கூட்டத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் தனலிங்கம் பேசுகையில், அரசியல் கட்சிகள் சுட்டிகாட்டியுள்ள புகாா்கள் குறித்து விசாரனை மேற்கொள்ளப்படும். தோ்தல் விதிமுறை மீறல்கள் இருப்பின் உரிய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து, தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் அலுவலா்கள் உள்ளிட்ட வருவாய்த் துறையினா் பங்குகொண்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதில் தோ்தல் நேரத்தில் அலுவலா்கள் மேற்கொள்ளவேண்டிய முக்கியப் பணிகள் குறித்தும், தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும் விளக்கிக் கூறப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →