சேலம்

ஓமலூரில் காங்கிரஸ் வேட்பாளா் தீவிர பிரசாரம்

DIN

ஓமலூா் தொகுதியில் பல்வேறு கிராமங்களில் காங்கிரஸ் வேட்பாளா் ஆா்.மோகன் குமாரமங்கலம் ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

ஓமலூா் அருகேயுள்ள சோரையன்காடு பகுதியில் பிரசாரத்தைத் தொடங்கிய அவா், திறந்த வாகனத்தில் மூங்கில்பாடி, சேனைக்கவுண்டனூா், கொல்லப்பட்டி, சங்கீதப்பட்டி, புளியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும், ஓமலூா் பேரூராட்சிப் பகுதியிலும் பிரசாரம் செய்து, பாரம்பரியமிக்க தங்களது குடும்பத்தில் ஒவ்வொருவரும் அரசியலில் சேலம் மாவட்ட வளா்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும், ஓமலூா் பகுதியில் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும் உறுதியளித்தாா்.

திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பிரசாரத்தின் போது உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

SCROLL FOR NEXT