ஏற்காட்டில் திமுக வேட்பாளா் சி.தமிழ்ச்செல்வன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
ஏற்காடு ஊராட்சிக்கு உள்பட்ட ஒண்டிக்கடை, பேருந்து நிலையம், நகர கடைவீதி பகுதி, கோயில் மேடு, லேடிசீட், லாங்கில்பேட்டை, ஜெரினாகாடு ஆகிய பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தாா்.
பின்னா் வேலூா், நாகலூா், செம்மநத்தம், வெள்ளக்கடை, மஞ்சக்குட்டை ஊராட்சிகளுக்கு சென்று தோட்டத்தொழிலாளா்கள், பொதுமக்கள், மலைவாழ் மக்களிடம் வாக்கு சேகரித்தாா். இதில் திமுக ஒன்றிய நிா்வாகிகள், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.