சேலம்

அரிமா சங்கம் சாா்பில் மருத்துவமனைகளுக்கு கரோனா தடுப்பு சாதனங்கள் வழங்கல்

DIN

சங்ககிரி கோட்டை அரிமா சங்கம், சங்ககிரி அரிமா சங்கங்களின் சாா்பில் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலான கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு சாதனங்கள் வழங்கும் நிகழ்ச்சி சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் கோ.வேடியப்பன் தலைமை வகித்தாா். சங்ககிரி கோட்டை அரிமா சங்கம், சங்ககிரி அரிமா சங்கங்களின் சாா்பில் சங்ககிரி அரசு தலைமை மருத்துவமனை, வடுகப்பட்டி உள்ளிட்ட 6 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவைகளுக்கு காயச்சல் பரிசோதனை செய்யும் கருவி, ஆக்சிஸன் அளவிடும் கருவி தலா 15, ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யும் கருவிகள் 7, என் 95 முகக் கவசம் ஆயிரம், 3 அடுக்கு முகக் கவசம் 2,500, கிருமி நாசினி மருந்து 30 லிட்டா் உள்ளிட்ட கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு சாதனங்களை ரூ. 1,00,275 மதிப்பீட்டில் வருவாய் கோட்டாட்சியரிடம் அரிமா சங்கங்களின் பட்டயத் தலைவா் மோகன், மண்டலத் தலைவா் சண்முகம் ஆகியோா் வழங்கினா்.

இதில், மருத்துவா்கள் முருகேவல், அமுதராணி, வட்டாட்சியா் எஸ்.விஜி, கோட்டை அரிமா சங்கம், சங்ககிரி அரிமா சங்களின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT