சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம் ஆட்டையாம்பட்டியில் 119 அங்கன்வாடிகளில் 200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. வீரபாண்டி ஒன்றிய அட்மா குழுத்தலைவா் வெண்ணிலா சேகா் தலைமை வகித்தாா்.
இவ்விழாவில் குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் கவிதா, கொண்டலாம்பட்டி மகளிா்நிலைய காவல் ஆய்வாளா் உஷாராணி, ஆட்டையாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் அம்சவல்லி, ஆட்டையாம்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவா் முருகபிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.