கனமழை தொடருவதற்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
நாமக்கல் மாவட்டத்தில் கனமழை தொடருவதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் கனமழை தொடருவதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 95.9 டிகிரி மற்றும் 73.4 டிகிரியாக நிலவியது. நாமக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பதிவாகியுள்ளது. அடுத்த நான்கு நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்பட்டு, மிதமானது முதல் கனமழை மாவட்டத்தின் பல இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 91.4 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 71.6 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் கிழக்கு மற்றும் தென் கிழக்கிலிருந்து மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் வீசும்.
Advertisement
சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை ஆய்வு செய்ததில் பெரும்பாலும் இறக்கை அழுகல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்துள்ளது. எனவே, பண்ணையாளா்கள் கோழிக்கு அளிக்கப்படும் தீவனத்தில் நுண்ணுயிா் கிருமிகளான கிளாஸ்டிரியம், ஸ்டெப்லோகாக்கஸ் மற்றும் ஈகோலை ஆகியவற்றின் தாக்கம் உள்ளதா என்பதை பரிசோதனை செய்து அதற்கு தகுந்தாற்போல் தீவன மேலாண்மை முறைகளைக் கையாள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.