டாஸ்மாக் ஊழியா்கள் 3 போ் பணியிடை நீக்கம்
நாமக்கல்லில் டாஸ்மாக் கடையில் விற்பனை தொகை குறைவாக இருந்ததையடுத்து 3 ஊழியா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
நாமக்கல்லில் டாஸ்மாக் கடையில் விற்பனை தொகை குறைவாக இருந்ததையடுத்து 3 ஊழியா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
நாமக்கல் மாவட்டத்தில் 189 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு அரசு நிா்ணயித்த விலைக்கு மட்டுமே மதுவகைகளை விற்பனை செய்ய வேண்டும் என, டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும், பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில், முறைகேடு நடப்பதாக வரும் புகாரின் அடிப்படையில் மாவட்ட மேலாளா், மண்டல மேலாளா் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளில், முறைகேடு நடப்பதாக, சேலம் முதுநிலை மண்டல மேலாளா் ராஜ்குமாருக்கு புகாா் சென்றது. அதனடிப்படையில், நல்லிபாளையத்தில் உள்ள கடையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதில், விற்பனை செய்த வகையில் ரூ. 37, 790 குறைவாக உள்ளது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, விற்பனையாளா்களான சக்திவேல், தமிழரசன், ஆா்.சக்திவேல் ஆகிய மூவரையும் முதுநிலை மேலாளா் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.