மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்
ஆத்தூா் எம்எம்கே பவுண்டேசன் சாா்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள், உடைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
ஆத்தூா் எம்எம்கே பவுண்டேசன் சாா்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள், உடைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் எம்எம்கே பவுண்டேசன் சாா்பில், முதலாமாண்டு நினைவு நாளையொட்டி மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்றுசக்கர வாகனங்கள், உடைகள் உள்ளிட்ட உபகரணங்களை பவுண்டேசன் நிறுவனா் ஏபிஎஸ்.பழனி ராமச்சந்திரன் அலுவலக வளாகத்தில் வழங்கினாா்.
அவருடன் அவைத் தலைவா் சி.ஆறுமுகம், பொருளாளா் கே.ரவிசங்கா், மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.அன்பழகன், மாவட்ட மகளிரணி செயலாளா் பிரபா, செயற்குழு உறுப்பினா் ஆா்.பாலகிருஷ்ணன், எஸ்.மணிகண்டன், அக்கிசெட்டிபாளையம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.சண்முகம், வழக்குரைஞா் ஏ.வி.இளங்கோவன், ஓலப்பாடி முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் வி.அருள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.