சேலம்

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்ற எம்எல்ஏ

மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட எம்.காளிப்பட்டி, மல்லிகுந்தம், பள்ளிப்பட்டி, கூணான்டியூா் ஊராட்சிகளில் பொதுமக்களிடம்

DIN

மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட எம்.காளிப்பட்டி, மல்லிகுந்தம், பள்ளிப்பட்டி, கூணான்டியூா் ஊராட்சிகளில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை சட்டப்பேரவை உறுப்பினா் சதாசிவம் பெற்றாா். அந்த மனுக்களை அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

மேச்சேரியிலிருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் 2018 -2019ஆம் ஆண்டில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு செயல்படுத்தப்படாமல் உள்ள குடிநீா்த் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு அவா் ஆலோசனை வழங்கினாா்.

அதேபோல அப்பகுதியில் நீண்ட நாள்களாக குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீா் வீணாக சாலையில் ஒடுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்ததையடுத்து உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொண்டாா். மல்லிகுந்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பழுதடைந்த கட்டடத்தை புதுப்பிக்கவும் சமையலறைக் கட்டவும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்படும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மேச்சேரி ஊராட்சி ஒன்றிய ஆணையா் ரேவதி, கிராம ஊராட்சிகள் ஆணையா் முருகேசன், வருவாய்த் துறை, குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT