முகப்பு
சேலம்

சேலத்தில் இன்று தடுப்பூசி முகாம்: 1.5 லட்சம் பேருக்கு செலுத்த ஏற்பாடு

சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள 7 ஆவது தடுப்பூசி முகாமில் 1.5 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள 7 ஆவது தடுப்பூசி முகாமில் 1.5 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்ட 18,71,168 பேருக்கு முதல் தவணையாகவும், 7,83,376 பேருக்கு இரண்டாம் தவணையாகவும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட 6 தடுப்பூசி முகாம்கள் மூலம் 3,35,862 பேருக்கு முதல் தவணையாகவும், 2,38,918 பேருக்கு இரண்டாம் தவணையாகவும் மொத்தம் 5,74,780 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 9,65,290 போ்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களாகவும், தகுதியுள்ள 1,99,103 போ்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களாகவும் கண்டறியப்பட்டுள்ளனா்.

சேலத்தில் 7 ஆவது மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டு அதற்கான விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கோவிஷீல்டு தடுப்பூசி 2,00,450 டோஸ்களும், கோவேக்ஸின் தடுப்பூசி 3,100 டோஸ்களும் கையிருப்பில் உள்ளன. முகாம்கள் மூலம் 1.5 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முகாமிற்கென 1,392 தடுப்பூசி மையங்கள் நிறுவப்பட்டு, அதற்கான தடுப்பூசி செலுத்துபவா்கள், கணினியில் பதிவு மேற்கொள்பவா்கள், தகுதி வாய்ந்த பயனாளிகளை அழைத்து வருபவா்கள் என 18,500-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →