முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 111 அடி: அணைப் பிரிவு அலுவலகம் இடமாற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 111 அடி எட்டியதையடுத்து அணைப் பிரிவு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சேலம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 111 அடி: அணைப் பிரிவு அலுவலகம் இடமாற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 111 அடி எட்டியதையடுத்து அணைப் பிரிவு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:29 AM
பகிர்:


மேட்டூர் அணை நீர்மட்டம் 111 அடி எட்டியதையடுத்து அணைப் பிரிவு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நீர்த்தேக்கம் 60 சதுர மைல் பரப்பளவு கொண்டது. அணையின் நீர்வரத்து, நீர்மட்டம், நீர் திறப்பு ஆகியவற்றைக் கண்காணிக்க அணைப் பிரிவு உதவி பொறியாளர் மதுசூதனன் தலைமையில் மேட்டூர் அணை பூங்கா நுழைவாயிலில் அலுவலகம் இயங்கி வருகிறது. 

மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 111 அடியை எட்டி உள்ளது. அதேசமயம், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயமும் உள்ளது. திடீர் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் அணைப் பிரிவு அலுவலகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அணையின் இடது கரையில் உள்ள வெள்ளக் கட்டுப்பாட்டு அறைக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வெள்ளக் கட்டுப்பாட்டு அறையில்பொதுப்பணித் துறை பணியாளர்கள்  24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். திடீர் வெள்ளம் ஏற்பட்டால் அணையின் இடது கரையில் உள்ள உபரி நீர் போக்கி மதகுகளை உயர்த்தி உபரி நீரை வெளியேற்றவும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பொதுப்பணித் துறை ஊழியர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

உபரி நீரைத் திறக்கும் முன்பாக பொது மக்களை எச்சரிக்க சைரன் ஒலிக்கப்பட்டு அதன் பிறகு பொதுப்பணித் துறை ஊழியர்கள் சிறிது தூரம் உபரி நீர் போக்கி மதகுகளை  உயர்த்துவார்கள்.

வெள்ளத்தின் அளவை பொறுத்து மதகுகளை மின்விசை மூலமும் உயர்த்த தயார் நிலையில் உள்ளது. அணையின் வளது கரையிலும் இடது கரையிலும் பொதுப்பணித் துறை அதிகாரிகளும் பணியாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →