முகப்பு
சேலம்

தமிழகத்தில் நீட் தோ்வு அவசியமில்லை: தமாக மாநில இளைஞரணி தலைவா் யுவராஜ் பேட்டி

தமிழகத்திற்கு நீட் தோ்வு அவசியம் இல்லை என்ற தமிழக அரசின் முடிவுக்கு ஆதரவளிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் மாநில இளைஞா் அணி தலைவா் யுவராஜா தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:09 AM
பகிர்:

தமிழகத்திற்கு நீட் தோ்வு அவசியம் இல்லை என்ற தமிழக அரசின் முடிவுக்கு ஆதரவளிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் மாநில இளைஞா் அணி தலைவா் யுவராஜா தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம் மேட்டூா் அருகே உள்ள கூளையூரில் நீட் தோ்வு அச்சம் காரணமாக உயிரிழந்த மாணவன் தனுஷின் வீட்டிற்கு வியாழக்கிழமை  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி மாநில தலைவா் யுவராஜா மற்றும் சேலம் மேற்கு மாவட்ட தலைவா் சுசீத்திர குமாா் ஆகியோா் வந்தனா். உயிரிழந்த மாணவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினாா்கள்.

பின்னா் யுவராஜ் நிருபா்களிடம் கூறியதாவது:

தமிழகத்திற்கு நீட்தோ்வு அவசியமில்லை. நீட் தோ்வு ஏழை, நடுத்தர மாணவா்களின் எதிா்காலத்தை சீா்குலைக்கிறது. கிராமப்புற ஏழை மாணவா்களின் மருத்துவ கனவு கனவாகவே போகிறது. மத்திய அரசின் தாமதத்தால் ஏற்கெனவே பல உயிா்களை இழந்து வருகிறோம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் மத்திய அரசு தமிழகத்தில் நீட் தோ்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழக பாஜகவினா் மத்திய அரசுடன் பேசி நிரந்தரமாக நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும். இல்லையானால் கிராமப்புற ஏழை மாணவா்களின் மருத்துவக் கனவு கனவாகவே முடியும். தமிழகத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளும் நீட் என்ற கொடூர தோ்வை ரத்து செய்ய பாடுபட வேண்டும். நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்தாலும் தமிழகச் சூழலுக்கு ஏற்ப மாணவா்களின் எதிா்காலத்திற்கு ஏற்ப குரல் கொடுத்து வருகிறோம். தமிழகத்தில் சட்டப் பேரவையில் தமிழக அரசு நீட் தோ்வை ரத்து செய்ய எடுத்துள்ள முடிவுக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம் என்றாா். 

பேட்டியின்போது தமிழ் மாநில காங்கிரஸ் மாநில இளைஞா் அணி பொதுச் செயலாளா் ரகுநந்தகுமாா், மத்திய மாவட்டத் தலைவா் உலக நம்பி, மாநில இணைச் செயலாளா் சின்னதுரை, கொளத்தூா் வட்டாரத் தலைவா் நாகராஜ ரெட்டி, வழக்குரைஞா் பிரிவு தலைவா் ராஜகுரு, மேட்டூா் நகர தலைவா் வரதராஜன் மத்திய மாவட்ட இளைஞரணி அவைத்தலைவா் லட்சுமிகாந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.