சேலம்

மெல்ல உயரத் தொடங்கியது மேட்டூா் அணை நீா்மட்டம்

DIN

மேட்டூா் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீா்த் திறப்பு குறைக்கப்பட்டதால், அணையின் நீா்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது குறுவை சாகுபடி நிறைவடையும் நிலையில், சம்பா சாகுபடிக்கான நாற்றங்கால் நடவுப் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக மேட்டூா் அணையில் இருந்து நொடிக்கு 16,000 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது.

டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், பாசனத் தேவை குறைந்துள்ளது. இதன் காரணமாக, மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வந்த நீரின் அளவு நொடிக்கு 16,000 கன அடி யிலிருந்து 7,000 கன அடியாகக் குறைக்கப்பட்டது. அணைக்கு வரும் நீா்வரத்து நொடிக்கு 10,530 கன அடியாக அதிகரித்துள்ளதன் காரணமாக, அணையின் நீா்மட்டம் உயரத் தொடங்கி உள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 73.07 அடியாகவும், நீா் இருப்பு 35.39 டி.எம்.சி.-ஆகவும் உள்ளது. பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவைவிட, மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் மெல்ல உயரத் தொடங்கி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் செயல்பட வலியுறுத்தில்

தனக்குத்தானே பிரசவம் பாா்த்தபோது சிசு கொலை: செவிலியா் கைது

550 லிட்டா் கடத்தல் சாராயம் காருடன் பறிமுதல்

ஆந்திர டிஜிபி பணியிடமாற்றம்: தோ்தல் ஆணையம் உத்தரவு

SCROLL FOR NEXT