முகப்பு
சேலம்

சங்ககிரி அருகே மின்சாரம் தாக்கியதில் மின்வாரிய ஊழியர் பலி 

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த சுண்ணாம்புகுட்டை பகுதியில் மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை  சனிக்கிழமை

Updated On : 16 ஏப்ரல், 2022 at 3:19 PM
கோப்புப்படம்
பகிர்:

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த சுண்ணாம்புகுட்டை பகுதியில் மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை  சனிக்கிழமை சரிசெய்து கொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக மின்சாரம் தாக்கியதில் மின்வாரிய ஊழியர் பலியானர். 

சங்ககிரி வட்டம், ஆலத்தூர் ரெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் ராஜவேல் (52). அவர் சங்ககிரி மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வழக்கம்போல் பணிக்கு வந்து விட்டு சுண்ணாம்குட்டை அருகே உள்ள பறையன்காட்டானூருக்கு செல்லும் வழியில் உள்ள கள்ளுக்கடை மின்மாற்றியில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்க வேலை செய்துள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக மின்சாரம் தாக்கியதில் பலத்த காயமடைந்துள்ளார். காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே இறந்து விட்டார். 

இது குறித்து சங்ககிரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Advertisement

உயிரிழந்த மின்வாரிய ஊழியர் ராஜவேலுக்கு சாந்தி (47) என்ற மனைவியும், ஊத்துக்குளி மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வரும்  ராஜ்குமார் (23), பூவிழிராஜன் (22) இரு மகன்களும், வினிதா  (21) என்ற மகளும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.