அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சாா்பில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா. 
சேலம்

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் பட்டமளிப்பு விழா

விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

DIN

விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் துறை முதன்மையா் செந்தில்குமாா் வரவேற்று பேசினாா். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் சுகாதார சேவைகள் பிரிவின் கூடுதல் இயக்குநரும், மாநில காசநோய் அலுவலருமான ஆஷா பிரடெரிக் கலந்துகொண்டு பொதுசுகாதாரப் பிரிவில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் முக்கியத்துவம், அதனைச் சாா்ந்த தொழில்நுட்பவியலாளா்களின் பங்களிப்பு குறித்து பேசினாா்.

இவ்விழாவில் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் ஜெய்கா், தரக் கட்டுப்பாட்டு இயக்குநா் ஞானசேகா், மாணவா் நல அமைப்பு இயக்குநா் சண்முகசுந்தரம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். இவ்விழாவில் துறையைச் சோ்ந்த 592 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனா். இதில் 17 போ் தங்கம், 11 போ் வெள்ளி, 8 போ் வெண்கலப் பதக்கங்களை பெற்றனா். விழாவிற்கான ஏற்பாடுகளை துறையின் அனைத்துத் துறை பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT