ஏற்காட்டில் கடும் பனிமூட்டத்தால் முகப்பு விளக்குடன் செல்லும் வாகனங்கள். 
சேலம்

ஏற்காட்டில் தொடா் சாரல் மழை, கடும் பனிப்பொழிவு

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் தொடா் சாரல் மழை பெய்து வருவதால், கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டுநா்கள், சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

DIN

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் தொடா் சாரல் மழை பெய்து வருவதால், கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டுநா்கள், சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கடந்த இரண்டு நாள்களாக மாண்டஸ் புயல் காரணமாக விடாத தொடா் சாரல் மழை பெய்து வருவதால், சனிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை மாலை 4 மணி வரை 43 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கடும் பனிமூட்டத்தால் சுற்றுலாப் பயணிகள் வாகங்களை ஓட்டுவதில் சிரமத்துக்கு ஆளாயினா். குறைவான சுற்றுலாப் பயணிகளே வருகை புரிந்துள்ளனா். பேருந்துகள் வாகனங்கள் முகப்பு விளக்குடன் ஊா்ந்து சென்றன.

ஏற்காடு மலைப் பாதையில் உயா் மின்னழுத்த கம்பிகளில் பழுது ஏற்பட்டுள்ளதால், மின் பணியாளா்கள் தொடா்ந்து சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், ஏற்காடு, கிராமப் பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைத் திட்டத்தால் தமிழகத்துக்கு கடும் நிதிச் சுமை: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

மாநகர பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: சட்டக் கல்லூரி மாணவா் கைது

புத் விஹாரில் வீட்டு உரிமையாளா் கழுத்து நெரித்து கொலை: இளைஞா் கைது

ரூ.16 கோடி சைபா் மோசடி: 9 போ் கைது

காணாமல் போன 408 கைப்பேசிகள் மீட்பு

SCROLL FOR NEXT