சேலம்

செந்தாரப்பட்டியில் ஐம்பதாண்டுகள் பழமையான தொகுப்பு வீடுகள் சீரமைக்கப்படுமா?

எஸ்.ரம்யா

தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியில் ஐம்தாண்டுகள் பழமையான தொகுப்பு வீடுகள், அரசால் சீரமைத்து தரப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியில் 1972 ஆம் ஆண்டு தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 199 தொகுப்பு வீடுகள், ஆறு ஏக்கர் நிலப்பகுதியில் அப்பகுதியிலுள்ள ஏழை ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவசமாக கட்டித்தரப்பட்டது. இந்த வீடுகள் தற்போது 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதில் அனைத்து வீடுகளும் மிகவும் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன.

199 வீடுகளில், 25 வீடுகளில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த செலவில், அக்குடியிருப்பை நன்கு புதுப்பித்துக்கொண்டனர். எஞ்சிய 174 தொகுப்பு வீட்டிலுள்ளோர், தங்களது வீடுகளை சீரமைக்க வசதியில்லாமல் தவிக்கும் கூலி வேலை செய்யும் ஏழை மக்கள். அந்த 174 வீடுகளும் இடிந்துவிழும் நிலையில் மிகவும் ஆபத்தான சூழலில் காணப்படுகின்றன.

இதுகுறித்து 2009 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் அப்போதைய பேரூராட்சிக் கவுன்சிலர் ரமேஷ்பெரியண்ணன், தமிழக அரசு நிர்வாகத்தினர் பலருக்கும், சீரமைத்து தரக் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தார்.

இருப்பினும் பல்வேறு காரணங்களால் இந்த வீடுகள் சீரமைத்து தரப்படவில்லை. இந்நிலையில் செந்தாரப்பட்டி பேரூராட்சியின் 2 வது வார்டு கவுன்சிலர் பவுனாம்பாள் ரமேஷ்பெரியண்ணன் கூறியதாவது, தமிழக அரசால் கட்டித்தரப்பட்ட தொகுப்பு வீடுகள் அனைத்தையும் சீரமைத்து தரவேண்டும் என்றும் மாநில முதல்வர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், சேலம் ஆட்சியர் ஆகியோருக்கு கோரிக்கை மனுக்களை நேரிலும், அஞ்சலிலும் வழங்கியுள்ளேன்.

தற்போதைய தொடர் மழையால், தொகுப்பு வீடுகள் இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்படும் முன்பே, தமிழக அரசு உடனடியாக இத்தொகுப்பு வீடுகளை சீரமைத்து தரவேண்டும், என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிவு

தேசிய இரட்டையா் ஸ்குவாஷ்: ஜோஷ்னா, அபய்க்கு தங்கம்

வெளியேறினாா் நடப்பு சாம்பியன் மெத்வதெவ்

பிரணாய் அதிா்ச்சித் தோல்வி

ஷாா்ஜா மாஸ்டா்ஸ் செஸ்: அா்ஜுனுக்கு முதல் வெற்றி

SCROLL FOR NEXT