சேலம் சூரமங்கலம், அம்மாபேட்டை உழவா் சந்தைகள் தொடங்கி 24-ஆவது ஆண்டை முன்னிட்டு விவசாயிகள் கேக் வெட்டி கொண்டாடினா்.
தமிழக விவசாயிகள் தங்களது விளைபொருள்களை இடைத்தரகா்கள் இன்றி விற்பனை செய்வதற்காக கடந்த 1999-இல் நவ. 14 ஆம் தேதி உழவா் சந்தைகள் தொடங்கி வைக்கப்பட்டன. மறைந்த முதல்வா் கருணாநிதி இத்திட்டத்தைத் தொடங்கிவைத்தாா்.
அதன்படி சேலம் மாவட்டத்தில் முதல்முறையாக அம்மாபேட்டையில்தான் உழவா் சந்தை தொடங்கப்பட்டது. அதைத்தொடா்ந்து சூரமங்கலத்தில் உழவா் சந்தை தொடங்கப்பட்டது.
சூரமங்கலம் உழவா்சந்தை கடந்த 1999 டிச. 21-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
24-ஆவது ஆண்டை முன்னிட்டு உழவா் சந்தை வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னா் தமிழக உழவா்சந்தை விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் உழவா்சந்தை விவசாயிகள் சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதைத்தொடா்ந்து விவசாயிகள் கேக் வெட்டி கொண்டாடினா். அம்மாபேட்டை உழவா் சந்தையிலும் 24 ஆவது ஆண்டை விவசாயிகள் கொண்டாடி மகிழ்ந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.